Home இலங்கை அரசியல் பாலித ரங்கே பண்டார வெளிநாடு பயணம்

பாலித ரங்கே பண்டார வெளிநாடு பயணம்

0

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார சற்று முன்னர் வெளிநாட்டுக்குப் பயணமாகியுள்ளார். 

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அவர் பாங்கொக் நோக்கிப் பயணப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

சனிக்கிழமை இரவு பதினொரு மணி 15நிமிடம் அளவில் பாங்கொக் நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் அவர் பயணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தகவல்கள் வெளியாகவில்லை

பாலித ரங்கே பண்டார விடுமுறைக்காக வெளிநாடு சென்றுள்ளாரா அல்லது பாங்கொக்கில் இருந்து வேறு நாடு செல்லும் நோக்கில் அவர் பயணப்பட்டுள்ளாரா என்பது குறித்து மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. 

Source: https://tamilwin.com/article/balitha-range-bandara-travels-abroad-1726945739

NO COMMENTS

Exit mobile version