Home இலங்கை சமூகம் யாழில் வியாபார நிலையமொன்றின் செயற்பாடுகளுக்கு அதிரடியாக தடை

யாழில் வியாபார நிலையமொன்றின் செயற்பாடுகளுக்கு அதிரடியாக தடை

0

யாழ்ப்பாணம் (Jaffna) -நெல்லியடியில் அமைந்துள்ள ஒரு வியாபார நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தையும்
தடை செய்வதாக வடமராட்சி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்சநாதன்
தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”சுகாதாரத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் பச்சைகுத்தும் (TATTO)
செயற்பாட்டில் ஈடுபட்டமை மற்றும் அத்துமீறல்கள் இடம்பெற்றமையினால் நபர்
ஒருவர் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

சட்ட நடவடிக்கை

எனவே இந்த வியாபார நிலையம் இன்றிலிருந்து மறு அறிவித்தல்வரை மூடப்படுகின்றது.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் முன் அனுமதி இன்றி இந்தக் கடையைத்
திறத்தல், உள்நுழைதல், வியாபார செயற்பாடுகளில் ஈடுபடுதல் என்பன முற்றாகத்
தடைசெய்யப்பட்டுள்ளது என்பதனை இத்தால் பகிரங்கமாக அறியத்தருகின்றேன்.

இந்த அறிவித்தலை மீறினால் 1987ஆம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேசசபைகள் சட்டத்தின்
பிரிவு 78,149 இற்கு அமைவாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என
அறியத்தருகின்றேன்” என செயலாளரின் அறி்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version