Home இலங்கை சமூகம் தடைக்கு மத்தியில் பெருந்தொகை ரின் மீன்கள் இறக்குமதி: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தடைக்கு மத்தியில் பெருந்தொகை ரின் மீன்கள் இறக்குமதி: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

ரின் மீன் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 45 இலட்சத்திற்கும் அதிகமான ரின் மீன்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக உள்ளுர் ரின் மீன் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஷிரான் பெர்னாண்டோ (Shiran Fernando ) தெரிவித்துள்ளார்.

அதற்காக செலவிட்ட தொகை ஐம்பது மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் இரண்டு மில்லியன் டொலர் பெறுமதியான ரின் மீன்கள் இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெறுமதி சேர் வரி

நாட்டிலிருந்து ரின் மீன்களை இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், சுங்கத்தினூடாக இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன் காரணமாக நாட்டில் உள்ள 16 ரின் மீன் தொழிற்சாலைகள் இடிந்து விழும் நிலையை அடைந்துள்ளதாக ரின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் கபில பாலசூரிய தெரிவித்துள்ளார்.

வற் வரியின்றி வெளிநாடுகளில் இருந்து ரின் மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டாலும், உள்ளூர் ரின் மீன்களுக்கு 18% வற் விதிக்கப்பட்டாலும் உள்ளூர் தொழில்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version