Home இலங்கை சமூகம் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் தயார் நிலையில்..!

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் தயார் நிலையில்..!

0

கட்டார் மற்றும் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற சூழ்நிலையைத்
தொடர்ந்து, பயணிகள் விமான நிறுவனங்களின் எந்தவொரு அவசர தரையிறக்க
கோரிக்கைகளையும் பூர்த்தி செய்ய, தயார் என இலங்கை அறிவித்துள்ளது.

விமானப் போக்குவரத்து 

இதன்படி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையங்கள்
தயாராக இருப்பதாக, இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையகம்
அறிவித்துள்ளது.

வளைகுடாவின் சில பகுதிகளில் அதிகரித்த பிராந்திய பதற்றங்கள் மற்றும் வான்வெளி
கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையகம்
தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று கட்டார் மீது, ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய
கிழக்கின் பல இடங்களிலும் சேவையில் ஈடுபட்டிருந்த ஸ்ரீலங்கன் விமானங்கள்,
பாதுகாப்பான நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version