Home இலங்கை சமூகம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 2000 ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 2000 ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தல்

0

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான அடிப்படைச் சம்பளமாக 2000 ரூபா வழங்கப்பட வேண்டும் என மக்கள் போராட்ட இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

துண்டுபிரசுரம் விநியோக நடவடிக்கை

இது தொடர்பில் தெளிவுபடுத்தியும், மேலும் பல கோரிக்கைகளை உள்ளடக்கிய வகையிலும் துண்டுபிரசுரம் விநியோக நடவடிக்கை ஹட்டன் பேருந்து நிலையப் பகுதியில் இன்று
முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையம், சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, மக்கள் போராட்ட இயக்கம் என்பன இணைந்தே இதற்குரிய நடவடிக்கையை
முன்னெடுத்திருந்தன.

பல கோரிக்கை முன்வைப்பு

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 2000 ரூபா வழங்கப்பட
வேண்டும், மாத சம்பள முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும், தோட்ட அடிமை முறைமை
நீக்கப்பட வேண்டும், காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என்பன உட்பட மேலும் பல
கோரிக்கைகளை முன்னிறுத்தியே துண்டுபிரசுர விநியோகம் இடம்பெற்றது.  

NO COMMENTS

Exit mobile version