Home இலங்கை அரசியல் நாடு திரும்பும் பசில் ராஜபக்ச…! திசைமாறுமா நாமலின் அரசியல் எதிர்காலம்

நாடு திரும்பும் பசில் ராஜபக்ச…! திசைமாறுமா நாமலின் அரசியல் எதிர்காலம்

0

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலைத் தொடர்ந்து சிறீலங்கா பொதுஜன பெரமுனவில் மாற்றங்களை செய்தவற்காக அந்தக் கட்சியின் நிறுவனர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) இலங்கை திரும்பவுள்ளார்,

பசில் ராஜபக்ச ஜூன் மாதம் நாடு திரும்புவார் என கட்சி வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகி உள்ளது.

அவரின் வருகையை அடுத்து சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடுகளில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள்
இடம்பெறும். இவை நாமல் ராஜபக்சவின் எதிர்கால அரசியல் திசையை தீர்மானிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் திசையை தீர்மானிக்கும்

நாடு திரும்பும் பசில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்
கொண்டு கட்சியின் உறுப்பினர்களை ஒன்றிணைத்தல் வெளியேறியோர் அல்லது கட்சி செயல்பாட்டில் ஒதுங்கியிருப்போரை மீண்டும் இணைத்தல் உள்ளிட்ட விடயங்களை கையாள்வார் என்றும் கூறப்படுகிறது. 

இதேவேளை கடந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுடன் கூட்டணிஅமைத்த பெரமுன கட்சியினர் மீண்டும் இணையத் தொடங்கி உள்ளனர்.

இதன்படி முன்னாள் சபாநாயகர் மகிந்தயாப்பா அபேவர்த்தன, முன்னாள் தென்மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா
அபேவர்த்தன மாத்தறையின் முன்னாள் எம். பி. கருணா கொடித்துவக்கு இரத்தினபுரியின் முன்னாள் எம். பி. அகில
எல்லாவல ஆகியோர் சமீபத்தில் மொட்டுக் கட்சியில் மீண்டும் இணைந்துள்ளனர்.

இதேசமயம் பசில்  நாடு திரும்பியதும் சர்வஜன பலய கட்சியுடன் இணைந்த குழு ஒன்றும் மீண்டும் பெரமுனவில்
இணையும் என்றும் கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version