Home இலங்கை அரசியல் படலந்த வதை முகாம் குறித்து சாட்சியமளிக்க பலரும் ஆயத்தம்

படலந்த வதை முகாம் குறித்து சாட்சியமளிக்க பலரும் ஆயத்தம்

0

படலந்த வதை முகாம் குறித்து சாட்சியங்களை வழங்க பலர் காத்திருப்பதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த 88 – 89ம் ஆண்டுகளில் படலந்த வதை முகாமில் சித்திரவதைகளை அனுபவித்தவர்கள் இவ்வாறு சாட்சியமளிக்க ஆயத்தமாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

தாம் சட்டத்தின் பிரகாரம் செயற்படும் ஒருவர் எனவும் எவர் மீதும் சேறு பூசும் அவசியம் கிடையாது எனவும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தண்டனை

இதன்படி, பட்டலந்த வதை முகாமில் குற்றச் செயல்களை மேற்கொண்ட பலர் எதிர்வரும் நாட்களில் தண்டனைகளை அனுபவிக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version