Home இலங்கை சமூகம் இடைநிறுத்தப்படும் மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரின் போராட்டம்

இடைநிறுத்தப்படும் மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரின் போராட்டம்

0

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் தொடர்ச்சியாக
முன்னெடுத்துவந்த தொழில்கோரிய போராட்டம் கிழக்கு மாகாண ஆளுனரின்
உறுதிமொழியையடுத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட
வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினருக்கு இடையில் நேற்றையதினம் (21.07.2024) சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது, கிழக்கு மாகாணத்தில் திணைக்களங்களில் நிலவும் வெற்றிடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு திறைசேரிக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் திறைசேரியின் அனுமதி கிடைக்கும்போது பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்க நடவடிக்கையெடுக்கப்படும் என ஆளுனர் உறுதியளித்தாகவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் சி.லுகந்தன் தெரிவித்துள்ளார்.

  

பாரிய போராட்டம் 

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள்
இதனை தெரிவித்தனர்.

  

தமக்கான உறுதி மொழிகள் நிறைவேற்றப்படாவிட்டால் மட்டக்களப்பு மாவட்டம்
முடங்கும் வகையிலான போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

NO COMMENTS

Exit mobile version