Home ஏனையவை வாழ்க்கைமுறை மட்டக்களப்பு மக்களின் சுகாதார நிலைமை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

மட்டக்களப்பு மக்களின் சுகாதார நிலைமை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு பேரில் ஒருவருக்கு புற்று நோய் ஏற்பட்டு வருகின்றது. இது ஒரு சமுதாய பிரச்சினையாக இருக்கின்றது என வைத்தியரும்,
புற்று நோய் தடுப்பு சங்க தலைவருமான கருணாகரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “மாவட்டத்தில் வாகன சாரதிகள் நடத்துனர்கள் வெற்றிலை, பாக்கு புகையிலை,
புகைத்தல் போன்றவற்றிற்கு அடிமையாகியுள்ளனர். அவை இல்லாமல் அவர்களது தொழிலை
செய்ய முடியாது உள்ளனர்.

இது எந்தளவுக்கு வாய்புற்று நோயை கொண்டு வரும் என்பது
எங்களுக்கு தெரியும். இது பெரும் சமூதாய பிரச்சினையாக இருக்கின்றது.

புற்று நோய்   

எனவே முதலில் இந்த வாகன சாரதிகள் நடாத்துனர்களை முதலில் பரிசோதித்து புற்று
நோயை இனம் கண்டு வெற்றிலை, பாக்கு, புகையிலை , புகைத்தல்களை பாவிப்பதால்
ஏற்படும் புற்று நோய் தொடர்பாக அவர்களுக்கு தெளிவூட்டல்களை தெளிவுபடுத்துவதன்
மூலம் இதனை தடுக்கமுடியும்.

இந்த வெற்றிலை, பாக்கு புகையிலை, பாவிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால்
அவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. இதனால்
வாழ்க்கையே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது இதனை ஒவ்வொருவரும்
உணர்ந்து செயற்பட வேண்டும் என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் புற்று நோய்
உருவாகி வருகின்றது. இது ஒரு சமுதாய பிரச்சினையாக இருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version