Home இலங்கை சமூகம் உயிரிழந்த அம்ஷிகாவிற்கு நீதிகோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

உயிரிழந்த அம்ஷிகாவிற்கு நீதிகோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

0

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த அம்ஷிகாவிற்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. 

குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (11.05.2025) மட்டக்களப்பு காந்திப்பூங்கா வளாகத்தில்
இடம்பெற்றுள்ளது.

“என் மௌனம் என் குற்றமல்ல. உன் செயல் தான் குற்றம் – மௌனத்தைக் கலைப்போம்” எனும் தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.   

மெழுகுவர்த்தியேந்தி அஞ்சலி

இதன்போது அம்ஷிகாவின் ஆத்மசாந்தி வேண்டியும், அவருக்கு நீதிவேண்டியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கறுப்புப் பட்டியணிந்து, மெழுகுவர்த்தியேந்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பதற்கான
மகஜரும் வாசிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும்
பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். 

NO COMMENTS

Exit mobile version