Home இலங்கை சமூகம் மட்டக்களப்பு மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதிதேவி ஆலய விவகாரம் தொடர்பில் முறைப்பாடு

மட்டக்களப்பு மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதிதேவி ஆலய விவகாரம் தொடர்பில் முறைப்பாடு

0

மட்டக்களப்பு (Batticaloa) – மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதிதேவி ஆலயத்தின் அம்மன் பீடம்
உள்ள காணியில் மீன்வாடி அமைக்க குத்தகைக்கு வழங்கியமையால் இந்து மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த முறைப்பாடானது ஆலய நிர்வாகம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கம் ஆகியவற்றினால் நேற்றைய தினம் (25.06.2024) முன்வைக்கப்பட்டுள்ளது. 

பிரதேச
செயலகத்திற்கு உட்பட்ட இந்த காணியை மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதிதேவி ஆலய நிர்வாகம் 50
வருடத்துக்கு மேலாக சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் காணி அபகரிப்பில் இருந்து
பாதுகாத்து ஆலய உற்சவ காலங்களில் புனித மஞ்சள் நீராடுதலும் கும்பஞ் சொரிதல்
போன்ற புனித காரியங்களுக்காக பயன்படுத்தி வந்ததுடன் அங்கு வேல் நாட்டப்பட்டு
அம்மன் பீடம் அமைக்கப்பட்டு வழிபட்டு வந்தனர்.

காணி உரிமம்  

இந்த நிலையில், குறித்த காணியை மட்டு மாநகர ஆணையாளர் மாநகரசபைக்கு
உட்பட்டது என போலியான ஆவணங்களை தயாரித்து, இந்த காணியை யாரோனும்
பயன்படுத்துகின்றீர்களா என கிராமசேவகரிடமோ, பொது அமைப்புகளிடமோ, கிராம
மக்களிடமோ கேட்டறியாது பிரதேச செயலாளரின் அனுமதியின்றி இந்து மக்களின் புனித
தன்மையை இழிவுபடுத்தும் மீன்பிடி உரிமையாளர் ஒருவருக்கு வாடி அமைக்க
குத்தகைக்கு வழங்கப்பட்டது. 

அத்துடன் எந்த விதமான ஆவணங்களும் இன்றி மின்சாரம் குடிநீர்
இணைப்பு வழங்கும் படி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநகர ஆணையாளர் பணிப்புரை
வழங்கியுள்ளார்.

அதேவேளை, கடந்த 13ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் இருந்து இந்த காணிக்கான மின்சார
இணைப்பு பெயரை மாற்றி தருமாறு மின்சார பொறியலாளருக்கு கடிதம் ஒன்று
அனுப்பப்பட்டுள்ளது.

சுற்று நிருபம்

அத்துடன், காணி அமைச்சின் சுற்று நிருபத்தின் படி, “அரச காணியை அடாத்து செய்ய முடியாது. இந்த காணி
பொதுமக்களின் நம்பிக்கை சொத்து. கிராம பொதுமக்களுக்கு தெரியாமல் அந்த
கிராமத்திலுள்ள எந்த அரச காணியையும் எவருக்கும் வழங்க முடியாது.

மேலும், அரச காணியை
மீளப்பெறும் சட்டதின் கீழ் பிரதேச செயலாளர் அடாத்துகாரரை
வெளியேற்ற வேண்டும்.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 14 மற்றும் 12 உம் மீறப்பட்டுள்ளது என
அறிய தருவதுடன் இது ஒரு மனித உரிமை மீறல் செயற்பாடு” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே, இக்காணி அபகரிப்பு
தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் மட்டக்களப்பு மாநகர
ஆணையாளர் ஆகியோருக்கு கடிதம்  மூலமாகவும் நேரடியாகவும் சென்று தெரிவித்தோம் எந்த
விதமான தீர்வும் கிடைக்கவில்லை எனவே, இந்த அடிப்படை மனித உரிமை மீறல்
செயற்பாட்டிற்கு தீர்வு பெற்றுதருமாறு கோரி செய்யப்பட்ட முறைப்பாட்டில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version