மட்டக்களப்பில் (Batticaloa) ஆலயமொன்றில் ஒரு மாம்பழம் இரண்டரை இலட்சம்
ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு (09) நேற்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மதிப்பில் ஏலம்போன மாம்பழம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டப பூஜை
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பால்மணல்மேடு அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலய
வருடாந்த உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில் நேற்று (09) மாலை மாம்பழத்திருவிழா நடைபெற்றுள்ளது.
ஆலயத்தில் விசேட வழிபாடுகளை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நடைபெற்று சுவாமி
உள்வீதியுலா வந்ததை தொடர்ந்து வெளிவீதியுலா நடைபெற்றதுடன் அங்கு மாம்பழ
திருவிழா நடைபெற்றுள்ளது.
ஏலத்தொகை
முருகப்பெருமானும் பிள்ளையாரும் மாம்பழத்தினைப் பெறுவதற்காக மேற்கொண்ட
செயற்பாடுகளையும் மற்றும் தாய்தந்தையர்களே உலகம் என்பதை வெளிப்படுத்தும் வகையிலும்
இந்த திருவிழா நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது மாம்பழத்திருவிழாவுக்கு பயன்படுத்தப்பட்ட மாம்பழம் ஆலயத்தில்
ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.
இந்த மாம்பழத்தை சுமார் இரண்டரை இலட்சம் ரூபா ஏலத்தொகையினைக் கொண்டு
இளையதம்பி தவாகரன் என்றவர் பெற்றுகொண்டமை குறிப்பிடத்தக்கது.
