Home இலங்கை சமூகம் மட்டக்களப்பு – உன்னிச்சை குளத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம்: அச்சத்தில் மக்கள்

மட்டக்களப்பு – உன்னிச்சை குளத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம்: அச்சத்தில் மக்கள்

0

மட்டக்களப்பு (Batticaloa) – உன்னிச்சை குளத்தின் அளவை விட நீரின் அளவு அதிகரித்துள்ள நிலையில் அப்பகுதியில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குறித்த குளத்தின் 3 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள போதும் நீரின் அளவு அதிகமாக உள்ளது. அதவாது, 2 அடி உயரத்திற்கு நீரின் மட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன் காரணமாக, இரவு நேரத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை 

அத்துடன், இவ்வாறு நிரம்பும் நீர் முகத்துவாரம் வழியே கடலுக்கு வழிந்தோடவும் வாய்ப்புக்கள் குறைவு. 

அதேவேளை, உன்னிச்சையின் கீழ்பகுதியில் உள்ள சில கிராமங்களில் மழைகாரணமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், உன்னிச்சையை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில் அனைவரும் கவனமாக இருக்குமாறு தகவல்கள் பரிமாற்றப்பட்டு வருகின்றன. 

NO COMMENTS

Exit mobile version