Home இலங்கை சமூகம் நேரடி உதவிகளினால் ஆபத்து ஏற்படும் அபாயம் – கொழும்பு மக்களுக்கு எச்சரிக்கை

நேரடி உதவிகளினால் ஆபத்து ஏற்படும் அபாயம் – கொழும்பு மக்களுக்கு எச்சரிக்கை

0

சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கும்போது பிரதேச செயலகங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் மூலம் உதவிகளை வழங்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே கேட்டுக்கொண்டுள்ளார்.

நன்கொடையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தனது பொறுப்பு என்பதாலும், நேரடியாக உதவிகளை விநியோகிக்கும்போது ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாலும், நன்கொடையாளர்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு சேத விபரம்

கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 397 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 63,047 குடும்பங்களைச் சேர்ந்த 246,359 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அனர்த்தம் காரணமாக மூன்று பேர் இறந்துள்ளதாகவும், மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், 6 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 1,187 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் இதற்கிடையில், கிட்டத்தட்ட 20,000 பேர் தற்போது பாதுகாப்பான மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version