யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்தில் சென்று காணாமல் போன யாழ். இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பேருந்தில் சென்ற நிலையில், சீரற்ற காலநிழலை காரணமாக கலா ஓயா பகுதியில் வெள்ளத்தால் பேருந்து அடித்துச் செல்லப்பட்டது.
சடலமாக மீட்பு
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பலர் வீட்டொன்றின் கூரையில் இருந்து மீட்கப்பட்டிருந்த நிலையில், குறித்த இளைஞர் காணாமல் போயிருந்தார்.
இதன்படி, காணாமல் போயிருந்து குறித்த இளைஞர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனியார் வங்கியொன்றின் யாழ். கிளையின் முகாமையாளராக பணியாற்றிய நிகேதன் என்ற இளைஞரே இவ்வாறு சீரற்ற காலநிலையால் வெள்ளத்தில் சிக்கி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
