தமிழில் வெளிவந்த சிறந்த அனிமேஷன் திரைப்படங்கள் குறித்துதான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
கோச்சடையான் – 2014
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளிவந்த படம் கோச்சடையான். அவதார் படத்தை போலவே photorealistic motion capture technology-யை பயன்படுத்தி இப்படத்தை உருவாக்கியிருந்தனர். இப்படத்தில் ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடித்திருப்பார். மேலும் அவருடன் இணைந்து தீபிகா படுகோன், நாசர், ஆதி, சரத்குமார், ஜாக்கி ஷராப் என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
தி பெஸ்ட் ரிவெஞ் திரைப்படம் பார்க்க வேண்டுமா.. அப்போ இதை பாருங்க.. முழு லிஸ்ட்
இனிமே நாங்கதான் – 2007
வெங்கி பாபு இயக்கத்தில் தமிழில் வெளிவந்த சிறந்த அனிமேஷன் படங்களில் ஒன்றாகும் இனிமே நாங்கதான். இப்படத்தில் வந்த கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கு எம்.எஸ். பாஸ்கர், பாண்டு, வாசு விக்ரம், லல்லு சபா மாறன் ஆகியோர் குரல் கொடுத்திருந்தனர்.
குண்டன் சட்டி – 2023
குந்தன் சத்தி என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி அனிமேஷன் குழந்தைகள் திரைப்படமாகும். இப்படத்தை பி. கே. அகஸ்தி இயக்கியிருந்தார். இப்படம் கடந்த 2023ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
தமிழில் வெளிவந்த சிறந்த விளையாட்டு திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை
ராமாயணா தி எபிக் – 2010
சரித்திர கதைகளில் ஒன்று ராமாயணம். இதை வைத்து பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதே போல் இயக்குநர் சேட்டன் தேசாய் என்பவரின் இயக்கத்தில் உருவாகி 2010ம் ஆண்டு வெளிவந்த படம் ராமாயணா தி எபிக்.
