Home முக்கியச் செய்திகள் கொத்து கொத்தான முடி வளர்ச்சிக்கு சிறந்த ஆயுர்வேத எண்ணெய்

கொத்து கொத்தான முடி வளர்ச்சிக்கு சிறந்த ஆயுர்வேத எண்ணெய்

0

அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.

ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.

இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  1. வேப்ப இலைகள்
  2. சுத்தமான தேங்காய் எண்ணெய் 

பயன்படுத்தும் முறை

  1.  ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை சூடாக்கவும்.
  2. அதில் வேப்ப இலைகளைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
  3. இந்த எண்ணெயின் நிறம் கருமையாக மாறும் வரை கொதிக்க வைக்கவும்.
  4. எண்ணெயின் நிறம் மாறியதும், அதை வடிகட்டி குளிர விடவும்.

  5. இதற்குப் பின்னர் நீங்கள் இந்த எண்ணெயை ஒரு போத்தலில் சேமித்து வைக்கலாம்.
  6. இந்த எண்ணெயை உங்கள் உச்சந்தலையிலும் முடியிலும் தடவி சிறிது நேரம் மெதுவாக மசாஜ் செய்யவும்.

  7. குறைந்தது இரண்டு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் தலைமுடியில் அப்படியே விடவும்.

  8. அதன் பின்னர் இரசாயனம் அற்ற ஷாம்பூவை தடவி முடியை கழுவ வேண்டும்.
  9. இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.

  10. தேங்காய் எண்ணெய் மற்றும் வேம்பு எண்ணெயை உங்கள் தலைமுடியில் தொடர்ந்து தடவி வந்தால் சாதாரணமாக முடி வளர்வதை விட விரைவாக வளரும்.

NO COMMENTS

Exit mobile version