நாட்டின் அண்மைக்கால வரலாற்றில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தல் இதுவாகும் என பெப்பரல் (PAFRAL) அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்
அத்துடன் இம்முறை ஒரு வன்முறைச் சம்பவம் மாத்திரம் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இரண்டு வாக்குச்சீட்டுக் கிழிப்பு சம்பவங்களும், வாக்குச் சீட்டை காணொளி பதிவு செய்த இரண்டு சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
10 பேர் கைது
இதேவேளை, தேர்தல் வரலாற்றில் அமைதியான முறையில் நடைபெற்ற சிறந்த தேர்தல் இதுவென நம்புவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று (21) மாலை ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்திருந்தார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சிறு சம்பவங்கள் பதிவாகி 10 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டிஐஜி சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.