Home இந்தியா முழு அரச மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம்!

முழு அரச மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம்!

0

புதிய இணைப்பு

தமிழ் திரையுலகில் இயக்குநர் இமயம் என்று அழைக்கப்பட்ட பாரதிராஜாவின் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரச மரியாதை வழங்கப்பட்டது.

இதன்போது காவல்துறையினர் அணிவகுத்து வந்து பாரதிராஜா உடலுக்கு 72 குண்டுகள் முழுங்க முழு அரச மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம், அல்லி நகரத்தில், காட் ரோடு பண்ணைத் தோப்பில் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முதலாம் இணைப்பு

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இறுதிக்கிரியை இன்று!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு இன்று (11) தேனியில் நடைபெறும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் இமயத்தின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்று, அரச மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (10) அதிகாலை காலமானார்.

தமிழக முதலமைச்சர் அறிவிப்பு 

சென்னை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்குத் தமிழ்நாட்டு முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் திரைத்துறையினர் என பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் இந்தியத் திரைத்துறைக்கு இயக்குநர் பாரதிராஜா ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், அவரது இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு, பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள அவரது பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்று, அரச மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/bharathiraja-s-funeral-with-state-honors-today-1781151808

NO COMMENTS

Exit mobile version