Home உலகம் ரஷ்ய – உக்ரைன் போர் பதற்றம்: பைடன் வழங்கிய அதிரடி அனுமதி!

ரஷ்ய – உக்ரைன் போர் பதற்றம்: பைடன் வழங்கிய அதிரடி அனுமதி!

0

ரஷ்யா(Russia) – உக்ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகின்ற நிலையில் அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை யுக்ரைன் பயன்படுத்துவதற்கு அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) அனுமதி வழங்கியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விடயத்தினை அமெரிக்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் அனுமதி

பல மாதங்களாக, உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, ஏடி ஏசி எம் எஸ் (ATACMS) எனப்படும் ஏவுகணைகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

இந்தநிலையில், தற்போது உக்ரைனுக்கு தமது சொந்த எல்லைகளுக்கு வெளியே தாக்குவதற்கு அமெரிக்காவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தமக்கு எதிரான போரில் உக்ரைன் மேற்கத்தேய நாடுகளின் நீண்ட தூரம் தாக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்துமாயின் அது நேட்டோ இராணுவ கூட்டணி, நேரடியாகப் போரில் பங்கேற்பதாக அமையும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முன்னதாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version