பிக் பாஸ் அன்ஷிதா
பிக் பாஸ் 8 கடந்த வாரம் நிறைவு பெற்றது. இதில் முத்துக்குமரன் வெற்றியாளராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் சௌந்தர்யா இரண்டாவது இடமும், விஜே விஷால் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
பிக் பாஸ் வீட்டிற்குள் காதல் சர்ச்சையில் சிக்கிய போட்டியாளர்களில் ஒருவர் அன்ஷிதா. விஜே விஷாலுக்கும் அன்ஷிதாவிற்கும் இடையே காதல் என பேசப்பட்டு வந்த நிலையில், இருவரும் நல்ல நண்பர்கள் என கூறி, இதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
நடிகை தமன்னா ஆன்ட்டி-யா..! இளம் நடிகையால் அதிர்ச்சியடைந்த தமன்னா.. வீடியோ இதோ
இந்த பிக் பாஸ் 8ல் 84 நாட்களை கடந்தபின் எலிமினேஷன் ஆகி வெளியே சென்றவர் அன்ஷிதா. இவருக்கு இந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு முன் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செல்லம்மா சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய நிகழ்ச்சியில் அன்ஷிதா
இந்த நிலையில், பிக் பாஸ் முடிந்த கையோடு, விஜய் டிவியில் பிரம்மாண்டமாக புதிதாக துவங்கியுள்ள டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக அன்ஷிதா களமிறங்கியுள்ளார். அதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளிவந்துள்ளது.
பிக் பாஸுக்கு பின் நடன போட்டியில் அன்ஷிதா பங்கேற்றுள்ள நிலையில், ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.