Home சினிமா பிக் பாஸ் அர்ச்சனா – அருண் நிச்சயதார்த்தம் முடிந்தது! போட்டோவுடன் இதோ

பிக் பாஸ் அர்ச்சனா – அருண் நிச்சயதார்த்தம் முடிந்தது! போட்டோவுடன் இதோ

0

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து புகழ்பெற்றவர் அருண் பிரசாத். அவரது காதலியான சீரியல் நடிகை அர்ச்சனா பிக் பாஸ் 7ம் சீசனில் பங்கேற்று டைட்டில் ஜெயித்தார்.

அதன் பின் 8ம் சீஸனில் அருண் பிரசாத் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆனால் அவரால் டைட்டில் ஜெயிக்க முடியவில்லை.

அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா இருவரும் காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்துவிட்டனர் என்றாலும் திருமணம் எப்போது என்பது பற்றி இதுவரை பேசாமலே இருந்தனர்.

நிச்சயதார்த்தம்

இந்நிலையில் தற்போது அர்ச்சனா – அருண் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருக்கிறது. அதை அருண் போட்டோ வெளியிட்டு அறிவித்து இருக்கிறார்.

தற்போது ரசிகர்கள் ஜோடிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். 

NO COMMENTS

Exit mobile version