Home சினிமா புதிய படத்தில் நாயகியாக அறிமுகமாகும் பிக்பாஸ் புகழ் ஆயிஷா… நாயகன் யார்?

புதிய படத்தில் நாயகியாக அறிமுகமாகும் பிக்பாஸ் புகழ் ஆயிஷா… நாயகன் யார்?

0

ஆயிஷா

ஜீ தமிழில் சத்யா என்ற தொடரில் நடித்து தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை ஆயிஷா.

அந்த சீரியல் முடிவடைந்ததும் அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தவர் பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் நன்றாகவும் விளையாடியிருந்தார்.

பின் தொடர்ந்து சீரியல்களில் கலக்குவார் என்று பார்த்தால் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான உப்பு புளி காரம் வெப் தொடரில் நடித்தார்.

அந்த வெப் தொடர் ஆயிஷாவிற்கு நல்ல ரீச் கொடுத்தது என்றே கூறலாம்.

தனது 2 பெண் குழந்தைகளை முதன்முறையாக கையில் வாங்கிய தருணம்.. பாடலாசிரியர் சினேகன் வெளியிட்ட எமோஷ்னல் வீடியோ

புதிய படம்

தற்போது புதிய படம் ஒன்றில் ஆயிஷா நாயகியாக கமிட்டாகி இருக்கும் விஷயம் வெளியாகியுள்ளது.

அதாவது அறிமுக இயக்குனர் ஜாபர் இந்த படத்தை இயக்க மறைந்த நடிகர் ரகுவரன் சகோதரர் ரமேஷ், புகழ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஆயிஷாவிற்கு ஜோடியாக அஜித்தின் விடாமுயற்சி, இரும்புத்திரை, ராவண கோட்டம் போன்ற படங்களில் நடித்த கணேஷ் சரவணன் நாயகனாக நடிக்கிறாராம். 

NO COMMENTS

Exit mobile version