தமிழ் பிக் பாஸ் 2ம் சீசனில் கலந்துகொண்டு டைட்டில் ஜெயித்தவர் ரித்விகா. அவர் பரதேசி, மெட்ராஸ், கபாலி, ஒரு நாள் கூத்து, டார்ச் லைட் போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார்.
குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ரித்விகா தற்போது ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்து இருக்கிறார்.
நிச்சயதார்த்தம்
ரித்விகாவின் நிச்சயதார்த்தம் இன்று நடந்து முடிந்து இருக்கிறது. அவரது நீண்ட நாள் நண்பர் வினோத் லக்ஷ்மணனை தான் ரித்விகா கரம்பிடிக்கிறார்.
இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் ரித்விகா. அதற்கு நெட்டிசன்கள் வாழ்த்து
