Home சினிமா 2025ஆம் ஆண்டு அதிக லாபம் கொடுத்த படம் ஆண்பாவம் பொல்லாதது.. இறுதி வசூல் விவரம் இதோ

2025ஆம் ஆண்டு அதிக லாபம் கொடுத்த படம் ஆண்பாவம் பொல்லாதது.. இறுதி வசூல் விவரம் இதோ

0

ஆண்பாவம் பொல்லாதது

தொகுப்பாளராக மக்கள் மனதில் இடம்பிடித்து, பின் சீரியல்களில் நடிக்க தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக கலக்கிக்கொண்டிருக்கிறார் ரியோ ராஜ்.

இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது. இப்படத்தை அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் மாளவிகா மனோஜ் கதாநாயகியாக நடித்திருந்தார். இதற்கு முன் ரியோ மற்றும் மாளவிகா இருவரும் இணைந்து ஜோ படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விக்னேஷ்காந்த், ஷீலா, ஜென்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகை ஹேமா ராஜ்குமாரின் கணவரை பார்த்துள்ளீர்களா? இதோ புகைப்படம்

இறுதி வசூல்

இந்த நிலையில், ஆண்பாவம் பொல்லாதது திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் மொத்தமாக ரூ. 22 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் ஆண்பாவம் பொல்லாதது தமிழில் இந்த ஆண்டு அதிக லாபம் கொடுத்த படமாகியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version