சௌந்தர்யா நஞ்சுண்டன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 8ல் போட்டியாளராக களமிறங்கியுள்ளார் சௌந்தர்யா நஞ்சுண்டன். இவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார், மேலும் ‘வேற மாறி ஆபிஸ்’ எனும் வெப் தொடரிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியு இவர், தனது முன்னாள் காதலர் குறித்து பிக் பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களிடம் கூறியுள்ளார்.
முன்னாள் காதலர்
பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் போது காதலிக்க ஆரம்பித்துவிட்டாராம். கல்லூரி வரை இருவரும் காதலித்து வந்துள்ளனர். கல்லூரி படித்து வந்த நேரத்தில் தான், சௌந்தர்யா மாடலின் துறையில் என்ட்ரி ஆகியுள்ளார்.
அது அவருடைய காதலருக்கு பிடிக்கவில்லையாம். இதனால் தனது காதலருக்கு தெரியாமல் மாடலின் போட்டோஷூட் புகைப்படங்களை போனில் ஹைட் பண்ணி வைத்திருப்பாராம்.
அதை அவருடைய காதலர் ஒரு முறை பார்த்துவிட்டதால், நடு ரோட்டில் சௌந்தர்யாவை அடித்தாராம். அதுமட்டுமின்றி பல முறை தன்னை அடித்ததாக சௌந்தர்யா கூறியுள்ளார். ஒரு முறை சாஸ் பாட்டில் வைத்து தலையில் அடித்தாராம்.
இப்படி நடந்துகொண்டே இருந்த நிலையில், தனக்கு தன்னுடைய கேரியர் முக்கியம் என முடிவு செய்து இருவரும் பிரிந்துவிட்டோம் என சௌந்தர்யா கூறியுள்ளார்.
Source: https://cineulagam.com/article/bigg-boss-soundariya-nanjundan-about-her-ex-lover-1729227930
