Home சினிமா பிக்பாஸ் 9வது சீசனில் Wild Card என்ட்ரி, மாஸாக வந்த புரொமோ இதோ…

பிக்பாஸ் 9வது சீசனில் Wild Card என்ட்ரி, மாஸாக வந்த புரொமோ இதோ…

0

பிக்பாஸ் 9

பிக்பாஸ் 9, விஜய் டிவியில் பிரம்மாண்டத்தின் உச்சமாக தொடங்கப்பட்ட ஒரு மாஸ் நிகழ்ச்சி.

100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் கடுமையான போட்டிகள், சண்டை, பிரிவு என எல்லாவற்றையும் தாண்டி விளையாட வேண்டும்.

இந்த முறை 9வது சீசன் தொடங்கியதில் இருந்தே பெரிய பிரச்சனையாக ஓடிக் கொண்டிருக்கிறது, புரொமோக்கள் பார்க்கும் போதே தெரிகிறது அன்றைய எபிசோட் சண்டை தான் என்று.

இன்று வந்துள்ள புரொமோக்களிலும் பார்வதி சண்டை போடுவது தான் இடம்பெற்றுள்ளது.

புரொமோ

பரபரப்பாக நிகழ்ச்சி செல்ல விஜய் சேதுபதி இடம்பெறும் புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் விஜய் சேதுபதி Wild Card என்ட்ரி குறித்து பேசியுள்ளார், ஏற்கெனவே நாம் சின்னத்திரை நட்சத்திர ஜோடி பிரஜன்-சான்ட்ரா வீட்டிற்குள் வருவதாக சமூக வலைதளங்களில் வலம் வரும் தகவல் குறித்து அறிவித்திருந்தோம்.

அவர்கள் வீட்டிற்குள் வருகிறார்களா அல்லது வேறு யாரு வருகிறார்கள் என்பதை பொறுத்திருந்து காண்போம். 

NO COMMENTS

Exit mobile version