Home இலங்கை சமூகம் வங்கி சாரா கடன் வழங்கும் நிறுவனங்களை கட்டுப்படுத்த சட்டமூலம் தயார்

வங்கி சாரா கடன் வழங்கும் நிறுவனங்களை கட்டுப்படுத்த சட்டமூலம் தயார்

0

வங்கி சாரா கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு சட்டமூலம்
அறிமுகப்படுத்தப்படவுள்ளது,

இதில் இணங்காதவர்களுக்கு ஐந்து மில்லியன் ரூபாய் வரை அபராதம், ஐந்து ஆண்டுகள்
வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் வகையில் சட்டம்  நடைமுறைசெய்யப்படவுள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று கூறுகிறது.

சட்டமூலம் 

இந்தக் குற்றங்கள் நீதிவான் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் தண்டனைகள்
விதிக்கப்படும் வகையில் சட்டமூலம் தயாரிக்கப்படவுள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.

முன்மொழியப்பட்ட நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை ஆணையக யோசனையை, நிதி,
திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார
திசாநாயக்க வெளியிட்டார்.

இந்த யோசனை, கடன் வழங்கும் வணிகம் மற்றும் நுண்நிதி வணிகத்தின்
வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது
நாட்டில் பதிவு செய்யப்படாத அல்லது முறைசாரா பணக் கடன் வழங்கும் வணிகங்கள்
மாதாந்தம்.1.5 சதவீதம் முதல் ஆண்டுக்கு 310 வீதம்வரை அதிக விகிதங்களில்
வட்டியை வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையிலேயே அரசாங்கத்தின்
இந்த சட்டமூலம் தயாராகிறது.

நுண்நிதி நிறுவனங்களின் கூட்டமைப்பான லங்கா நுண்நிதி பயிற்சியாளர்கள்
சங்கத்தின் கூற்றுப்படி, பல நுண்நிதி அமைப்புக்கள் இயங்குகின்றபோதும், 34
நிறுவனங்கள் மட்டுமே இந்த அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version