Home இலங்கை சமூகம் மதங்களுக்கிடையிலான உரையாடலுக்கான பேராய அங்கத்தவராக ஜூட் நிசாந்த சில்வா நியமனம்

மதங்களுக்கிடையிலான உரையாடலுக்கான பேராய அங்கத்தவராக ஜூட் நிசாந்த சில்வா நியமனம்

0

பதுளை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜூட் நிசாந்த சில்வா  உரோமைத் தலைமைப்பிடத்தின் மதங்களுக்கிடையிலான உரையாடலுக்கான பேராய அங்கத்தவராக திருத்தந்தை 14ஆம் லியோவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் யூலை மாதம் 03ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

பேராய அங்கத்தவர்

2001ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட பேரருட்தந்தை ஜூட் நிசாந்த சில்வா தியதலாவ, பிபிலி மற்றும் பதுளை புனித மரியன்னை பேராலய பங்குத்தந்தையாகவும் ஹப்புத்தளை புனித எய்மர்ட் சிறிய குருமட அதிபராகவும் மறைமாவட்ட நீதித்துறை ஆயர் பதிலாளாகவும், மறைமாவட்ட செயலராகவும், மறைமாவட்ட கரித்தாஸ் கியூடெக் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

அத்துடன் 2023ஆம் பதுளை மறைமாவட்ட ஆயராக பணிப்பொறுப்பேற்றதுடன் தற்போது தேசிய கத்தோலிக்க சமூகத்தொடர்பு ஆணைக்குழுவின் பொறுப்பு ஆயராகவும் பணியாற்றிவருகின்றார்.

NO COMMENTS

Exit mobile version