Home உலகம் கறுப்பு ஜூலை நாளை முன்னிட்டு பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம்

கறுப்பு ஜூலை நாளை முன்னிட்டு பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம்

0

Courtesy: நிராஜ் டேவிட்

கறுப்பு ஜூலை நாளை முன்னிட்டு பிரித்தானியா (UK) நாடாளுமன்றத்திற்கு முன்னால் TYO & TCC-UK ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.

கறுப்பு ஜூலைப் படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் பகுதிகளில் நேற்றைய(23) முன்னேடுக்கப்பட்டது.

இதற்கமைய, பிரித்தானியா நாடாளுமன்றத்திற்கு முன்னால் குறித்த ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.

பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள், “தமிழீழ மக்கள் எதிர் கொண்டு வருகின்ற கட்டமைக்கப்பட்ட தமிழினவழிப்பின் கோர வரலாற்றுப் பதிவுகளை உலகின் முன் நிறுத்தி நீதிக்காக போராடுவதே எமது இளைய தலைமுறையின் தீர்க்கமான வரலாற்றுக் கடமையாகும்.

தேசியத் தலைவரின் சிந்தனைக்கான செயல் வடிவமாக போராட்டக்களத்தில் இணைந்திட அணி திரள்வோம்.” என குறிப்பிட்டனர்.   

NO COMMENTS

Exit mobile version