இலங்கை தமிழரசுக்கட்சிக்கு (ITAK) எதிராக சில கருப்பு ஆடுகளின் செயற்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே சிவஞானம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் அவர்கள் மீது தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சி.வீ.கே சிவஞானம் (C.V.K Sivagnanam) குறிப்பிட்டுள்ளார்.
வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
உரிய நடவடிக்கை
மேலும் கருத்து தெரிவித்த அவர், வலி. வடக்கு பிரதேச சபை விடயத்தில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தமது பணிப்புரைக்கு மாறாக செயற்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயற்பாடாகும்.
இதற்கு கட்சி சார்பில் உரிய நடவடிக்கை எடு்க்கப்படும். இவ்வாறான நடவடிக்கைகள் எமாற்றத்திற்குரியது.
எனினும் வலி. வடக்கு பிரதேச சபையில் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ள தமது உறுப்பினர் தமிழ்தேசியத்தோடு ஒன்றினைந்து செயற்படுவார் என கூறியுள்ளார்.
