Home இலங்கை சமூகம் சட்டவிரோத மதுபானங்களை விற்பனை செய்த உணவகம்: காவல்துறை சுற்றிவளைப்பு

சட்டவிரோத மதுபானங்களை விற்பனை செய்த உணவகம்: காவல்துறை சுற்றிவளைப்பு

0

கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர் ஒருவர் 8 கசிப்பு போத்தல்களுடன் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர். 

இவர்கள், உணவகம் ஒன்றில் தேநீர் மற்றும் குளிர்பானம் விற்பனை செய்கின்ற போர்வையில், கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.

கண்டி (Kandy) மத்திய சந்தையில் உள்ள உணவகம் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காவல்துறை

சந்தேகம் ஏற்படாத வகையில் குளிர்பான போத்தல்களில் கசிப்பு பொதி செய்து வைத்துள்ளதாகவும் உணவக கவுண்டரில் பணம் செலுத்திய பின்னர் , ஊழியர்களால் தேநீர் கோப்பையில் கசிப்பை ஊற்றி கொடுப்பதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சில காலமாக இடம்பெற்று வரும் இந்த வியாபாரத்தில், சந்தையில் வேலை செய்பவர்கள், கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் ஆகியோர் தினசரி வாடிக்கையாளர்கள் எனவும், அதிகாலை 5.00 மணி முதல் இந்த வியாபாரம் இடம்பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version