Home இலங்கை கல்வி மட்டக்களப்பில் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய பார்வையற்ற மாணவி

மட்டக்களப்பில் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய பார்வையற்ற மாணவி

0

மட்டக்களப்பில் (Batticaloa) 2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு பார்வையற்ற
மாணவியொருவர் தோற்றியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (10) மிகவும் அமைதியான முறையில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்று வருகின்றது.

புலமைப்பரிசில் பரீட்சை

குறித்த பரீட்சைக்கு மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையில் பயின்று வரும் பார்வையற்ற மாணவி ஒருவர் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் வித்தியாலயத்தில் பரீட்சை மண்டபத்தில் மாணவி
பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version