Home இலங்கை சமூகம் மட்டக்களப்பில் நினைவு கூறப்பட்ட மாவை : முன்னெடுக்கப்பட்ட இரத்த தான நிகழ்வு

மட்டக்களப்பில் நினைவு கூறப்பட்ட மாவை : முன்னெடுக்கப்பட்ட இரத்த தான நிகழ்வு

0

மட்டக்களப்பில் (Batticaloa) இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) பெயரில் இரத்த தான நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு மறைந்த மாவையின் 31 ஆவது நாளை நினைவு கூருமுகமாக இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் காரியாலயத்தில் இன்று (02) காலை எட்டு மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

தாயக ஊற்று

வந்தாறுமூலை தாயக ஊற்று ஏற்பாட்டில் “உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” என்ற தொனிப்பொருளில் குறித்த இரத்த தான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரித்தானியாவில் (United Kingdom)ஹெரொவ் ஆர்ட்ஸ் சென்டரில் மாவை சேனாதிராஜாவின் 31 ஆவது நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version