Home சினிமா சிறகடிக்க ஆசை சீரியலுக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர், அடுத்த லீட் என்ன?.. பிரபலம் கூறிய தகவல்கள்

சிறகடிக்க ஆசை சீரியலுக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர், அடுத்த லீட் என்ன?.. பிரபலம் கூறிய தகவல்கள்

0

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் இந்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் பரபரப்பின் உச்சமாக கதைக்களம் அமையப்போகிறது என்பது தெரிகிறது.

பரசுவின் திருமணத்தை முடித்து வீடு திரும்பிய அண்ணாமலை குடும்பத்திற்கு ஒரு ஷாக்கிங் தகவல் தெரிய வருகிறது.
பிரவுன் மணி, ரோஹினியின் மாமா இல்லை என்பதை வீட்டில் போட்டு உடைக்கிறார் முத்து, இதனால் அதிர்ச்சியாகிறார் விஜயா.

உடனே கோபத்தில் விஜயா, ரோஹினி முடியை பிடித்து வெளியே தள்ளுகிறார்.

கதைக்களம்

இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலின் Script Writer குரு சம்பத்குமார் ஒரு பேட்டியில், சிறகடிக்க ஆசை சீரியலுக்கு முதலில் சின்ன சின்ன ஆசை என தான் பெயர் வைத்தோம்.

பின் நடிகர்கள் தேர்வு அது இது என கொஞ்சம் காலம் ஆக அப்படியே சிறகடிக்க ஆசையாக மாறியது.
மீனா என்ற கதாபாத்திரம் நிஜமான ஒருவரை பொறுத்தே உருவானது.

ரோஹினி கதாபாத்திரம் அன்றாடம் வந்த ஒரு உண்மை செய்தியை வைத்து உருவானது. அவருக்கு ஒரு மகன் இருக்கும் விஷயம் இன்னொரு லீட் வைத்துவிட்டு இந்த விஷயத்தை உடைப்போம் என கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version