Home இலங்கை சமூகம் யாழில் இருந்து புறப்பட்ட படகு ஆறு கடற்றொழிலாளர்களுடன் மாயம்

யாழில் இருந்து புறப்பட்ட படகு ஆறு கடற்றொழிலாளர்களுடன் மாயம்

0

யாழ் (Jaffna) மயிலிட்டியில் இருந்து ஆறு கடற்றொழிலாளர்களுடன் சென்ற படகு இதுவரை திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மயிலிட்டியில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிக்காக நான்கு நாள்களுக்கு
முன்னர் ஆறு பேருடன் படகொன்று கடலுக்கு சென்றுள்ளது.

குறித்த பயணம் கடந்த
ஞாயிற்றுக்கிழமை மயிலிட்டித் துறைமுகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பயணித்த படகு

பருத்தித்துறையைச் சேர்ந்த நீண்ட நாள் படகில் ஆறு கடற்றொழிலாளர்கள் பயணித்துள்ளனர்.

இவ்வாறு கடற்றொழிலாளர்களுடன் பயணித்த படகு இன்று அதிகாலை வரை கரை திரும்பாததோடு
தொடர்பும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

you may like this…!

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் – திருவிழா

https://www.youtube.com/embed/CgU4hCVojlI

NO COMMENTS

Exit mobile version