Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் நீர்தேக்கத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவில் நீர்தேக்கத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

0

முல்லைத்தீவு (Mullaitivu) – முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதறிகுடா பகுதியில் உள்ள
நீர்தேக்கத்தில் இருந்து சடலம் ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

முள்ளியவளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற
தகவலுக்கு அமைய சடலம் இன்றிரவு (04.05.2024) மீட்கப்பட்டுள்ளது.

தண்ணீரூற்று கிழக்கு முள்ளியவளையினை சேர்ந்த 53 வயதுடைய செல்வராசா மணிமாறன்
என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை ருவாண்டாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள மற்றொரு நாடு

பொலிஸார் விசாரணை

அத்துடன் இவரது சடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளதுடன் இவரது உயிரிழப்பு தொடர்பில் முள்ளியவளை பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் புதறிகுடா பகுதியில் சட்டவிரோத மதுபானம் விற்பனைசெய்து வருவதாகவும் இதனை
நுகர்பவர்கள் இவ்வாறு புதறிகுடா நீர்தேக்கத்தில் விழுந்து
உயிரிழந்த சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளதாகவும் பிரதேச வாசிகள்
தெரிவித்துள்ளனர். 

வெளிநாட்டவர்களிடம் அறவிடப்படும் விசா கட்டணம் அதிகரிப்பு : வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர்

ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக லொஹான் ரத்வத்தே அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

NO COMMENTS

Exit mobile version