Home இலங்கை சமூகம் யாழில் இனம்தெரியாத ஒருவரின் சடலமொன்று மீட்பு

யாழில் இனம்தெரியாத ஒருவரின் சடலமொன்று மீட்பு

0

யாழில் (Jaffna) இனம்தெரியாத ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

யாழ் நகரப் பகுதியில் உள்ள புல்லுகுளத்தில் இன்று (08) மாலை சடலம்
இனங்காணப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்கு அருகில் உள்ள குறித்த
குளத்தில் சடலமொன்று மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் விசாரணை

உயிரிழந்தவர் பற்றியோ உயிரிழப்புக்கான காரணமோ தெரியவரவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் யாழ்ப்பாணம்
காவல்துறையினர் மற்றும் தடயவியல் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version