யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட குறித்த நபர் யார் என்பது இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுக்கடலில் தவறி விழுந்த நபர்
இந்த நிலையில், குறித்த சடலம் இந்தியா இராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்று கடந்த 6ஆம் திகதி நடுக்கடலில் தவறி விழுந்து மாயமான கடற்றொழிலாளர் ஆரோக்கிய கிங் என்பவரது உடலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தமிழ்நாடு தகவல்கள் வெளியாகியுள்ளன.
