மாத்தறை, மிதிகம தொடருந்து நிலையம் அருகே இனம் தெரியாத வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மிதிகம தொடருந்து நிலையத்தை அண்டிய பகுதியில் கழிவு நீர் வழிந்தோடும் கால்வாயில் குறித்த வயோதிபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலத்துக்குரியவர் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனை
சடலத்தின் அருகே குறித்த நபரின் ஆடைகள் மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய பையொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலத்தை மீட்ட பொலிஸார், அதனை பிரேத பரிசோதனைக்காக மாத்தறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
