Home இலங்கை சமூகம் யாழில் மீட்கப்பட்ட இனந்தெரியாத நபரின் சடலம்!

யாழில் மீட்கப்பட்ட இனந்தெரியாத நபரின் சடலம்!

0

யாழ். பருத்தித்துறை பிரதான வீதி, கோப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள
வாய்க்காலில் இருந்து இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலத்தில் உள்ளவர் அந்தப் பகுதியை சேர்ந்தவர் இல்லை என்றும்,
யாசகம் பெறுபவராக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

அவரது வயது 70 – 75
வரை இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

 மரண விசாரணைகள் 

அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். 

அவரது உறவினர்கள் யாராவது வந்து சடலத்தை இனங்காணுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version