மட்டக்களப்பு(Batticaloa), ஓட்டமாவடி புளியடி வீதியில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவர் நேற்று (15) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பெண் வசித்து வந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வெளியானதையடுத்து சந்தேகத்தில் குறித்த இடத்தைப் பார்வையிட்ட அயலவர்கள் பெண் இறந்த நிலையிலிருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸார் விசாரணை
மரணமடைந்தவர் புளியடி வீதி, ஓட்டமாவடி-1யைச் சேர்ந்த செய்யத் அஹமது ஆசியா உம்மா (வயது 59) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண் மூன்று தினங்களுக்கு முன்னர் மரணித்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
