திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு கடற்கரை பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிண்ணியா – ஆலாங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரின் சடலமே இன்று (08.11.2025) இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள
உப்பாறு பாலத்துக்கு கீழ், இருவர் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும்
உபகரணங்களுடன் இருப்பதை அறிந்து, கடற்படையினர் நேற்றிரவு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கடற்படையினர் அருகில் சென்றவேளை, அந்த இருவரும் உபகரணங்களை அங்கேயே
விட்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை
இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை, ஒருவர் காணாமல் போனதாக ஒருவரால் கிண்ணியா பொலிஸில்
முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் உப்பாறு பாலத்துக்கு அருகில் 40 வயதுடைய நபரின் சடலம் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்க, இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
