Home இலங்கை சமூகம் யாழ்ப்பாணத்தில் ஆலயமொன்றிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் ஆலயமொன்றிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு

0

 யாழ்ப்பாணம் அராலி வீரபத்திரர் கோவில் மண்டபத்திலிருந்து இன்றையதினம்(19) முதியவர் ஒருவரது
சடலம் மீட்கப்பட்டுள்ளது. அராலியைச் சேர்ந்த முருகேசு கணேசலிங்கம் (வயது 81)
என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

ஆலயத்திற்கு வழிபடச் சென்ற முதியவர்

குறித்த நபர் இன்று மதியம் வழிபாட்டுக்காக ஆலயத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் ஆலய மண்டபத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டார். சாட்சிகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர்நெறிப்படுத்தினர். 

NO COMMENTS

Exit mobile version