யாழ் (Jaffna) மண்கும்பான் கடற்கரை பகுதியில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (11.08.2025) மாலை மீட்கப்பட்டுள்ளது
சடலம் ஒன்று மேற்படி கடற்பகுதியில் மிதப்பதாக கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதின் அடிப்படையில் ஊர்காவல்துறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை சடலத்தை பார்வையிட்டு மீட்டெடுத்தனர்.
காவல்துறை விசாரணை
ஊர்காவல்துறை காவல்துறையினர் விசாரணைகளின் பின் சடலம் கடலில் இருந்து மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவல்துறை காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.
