Home இலங்கை சமூகம் இரணைமடு குளத்தில் மீன்பிடிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு

இரணைமடு குளத்தில் மீன்பிடிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு

0

கிளிநொச்சி – இரணைமடு குளத்தில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

தூண்டில் மீன்பிடிக்க சென்ற மூன்று
பிள்ளைகளின் தந்தையான வேலாயுதம் ஜெயரூபன் என்பவரே உயிரிழந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார். 

திடீர் மயக்கம் 

தூண்டில் மீன் பிடிக்க சென்ற குறித்த குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்த நிலையில்
இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த குடும்பஸ்தர் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version