Home இலங்கை சமூகம் நுரெலியாவில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு

நுரெலியாவில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு

0

நுவரெலியாவில் அடையாளம் தெரியாத பெண்
ஒருவரின் சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பெண் நேற்று(19) மாலை நுவரெலியா கிரகரி வாவிக்கு அருகாமையில் உள்ள
வீதியோரத்தில் கிடந்ததை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்குத்
தெரியப்படுத்தி இருந்தனர்.

பிரேத பரிசோதனை

இந்நிலையில் பொலிஸார் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்குத் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்குச் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருத்துவ உதவி அதிகாரிகள் அந்தப் பெண் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.

அந்தச் சடலம் இதுவரை அடையாளம் காணப்படாததையடுத்து,  பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/body-unidentified-woman-recovered-in-nuwera-eliya-1724104961

NO COMMENTS

Exit mobile version