போயிங் 737 பயணிகள் விமானம் சம்பந்தப்பட்ட மற்றுமொரு ஆபத்தான சம்பவம் பதிவாகியுள்ளது, விமானம் வெறும் 10 நிமிடங்களில் 26,000 அடி உயரத்தில் இருந்து கீழே பதிந்த சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.
ஜப்பானின்(japan) ஸ்பிரிங் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த விமானம், சீனாவின்(china) ஷாங்காயிலிருந்து ஜப்பானின் டோக்கியோவிற்குச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென 36,000 அடி உயரத்தில் இருந்து 10,500 அடி உயரத்திற்குக் கீழே பதிந்தது
அழுத்தம் குறைந்ததற்கான சரியான காரணம்
தகவல்களின்படி, கபின் அழுத்தத்தில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி, அதில் இருந்த 191 பயணிகளிடையே குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தியது. அழுத்தம் குறைந்ததற்கான சரியான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.
சம்பவம் நடைபெற்றபோதிலும், விமானிகள் ஜப்பானில் உள்ள கன்சாய் விமான நிலையத்தில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளனர்.விமானம் இவ்வாறு திடீரென பதிந்ததற்கான காரணத்தைக் கண்டறிய மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.
https://www.youtube.com/embed/pfg_2k_2STU?start=39
