பாகிஸ்தானில் மீண்டும் தற்கொலை தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அமைந்துள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தற்கொலை குண்டுத் தாக்குதல்
இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் அவவ்விடத்திற்கு சென்றுள்ளதுடன், அவர்களில் ஒருவர் தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
நாங்கள் பதிலடி கொடுத்து வருகிறோம், அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் செய்தி நிறுவனம் காவல்துறை அதிகாரி மியான் சயீத் அகமதுவை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
அப்பகுதியில் பல வெடிப்புகள் நடந்துள்ளதாக காவல்துறை அதிகாரி மியான் சயீத் அகமது தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 11 ஆம் திகதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
