Home உலகம் ரஷ்ய இராணுவ அதிகாரியின் வாகனத்தில் வெடிகுண்டு பொருத்திய மர்ம நபர்கள்

ரஷ்ய இராணுவ அதிகாரியின் வாகனத்தில் வெடிகுண்டு பொருத்திய மர்ம நபர்கள்

0

ரோஸ்டோவ் பிராந்தியத்தில் ரஷ்ய (Russia) இராணுவ அதிகாரியின் வாகனத்தின் அடியில் வைக்கப்பட்ட  வெடிகுண்டு வெடித்து சிதறியதில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

மில்லெரோவோ நகரில் நேற்று (14) காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இராணுவப் பிரிவின் தலைமை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் வாடிம் எஸ். (Lt. Col. Vadim S.) தனது வாகனத்தை ஓட்டி சென்ற போது திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

உலோக பந்து

நிலைமையை சுதாகரித்துக் கொண்ட குறித்த அதிகாரி வாகனத்திலிருந்து குதித்து உயிர் தப்பியுள்ளார்.

முதலில் எரிவாயு பாகங்கள் செயலிழப்பால் வெடிவிபத்து நிகழந்ததாக கூறப்பட்டது.

இருப்பினும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மகிழூந்தைச் சுற்றி 4 மிமீ விட்டம் கொண்ட உலோக பந்துகளும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே எதிரிகள் இதனை திட்டமிட்டு மேற்கொண்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.  

Source: https://ibctamil.com/article/bomb-planted-in-russian-officers-car-1718473538

NO COMMENTS

Exit mobile version